கசடற கற்றுத் தரும் இணையதளம்

நான் முன்னரே ஒரு பதிவில் கூறியது போல இணையம் என்பது ஒரு கடல். இங்கு அளவில்லா ஆபத்துகள் உள்ளது போன்றே அளவற்ற பயன்களும் உள்ளன. எதுவுமே நீங்கள் அணுகுவதைப் பொறுத்தது. இங்கே கற்றுக் கொள்ள ஏராளமான விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. ஆனால் அவற்றில் எதில் இணைந்து என்ன கற்பது? NOTHING TO WORRY. கவலையேப்படாதீர்கள்.படம்

இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது UDACITY என்ற ஒரு அற்புதமான இணையதளத்தை பற்றிதான். இது ஒரு இணையப் பல்கலைக்கழகம். ஆம். இணையத்தில் ‘ஒசி’யில் பல விஷயங்களை கற்று தரும் ஒரு தளம். ’21-ஆம் நூற்றாண்டின் பல்கலைக்கழகம்’ என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் இந்த தளம் செபாஸ்டியன் த்ரூன் என்பவரால் தொடங்கப்பட்டது.

இந்த தளமானது கணினி சம்பந்தமான பல்வேறு பாடங்களைக் கற்றுக் கொடுக்கிறது. அனைத்தும் இலவசமாக. FREE. FREE. தற்போதைய நிலவரப்படி 11 விதமான பாடங்களை கற்றுத் தருகிறது. அது மட்டுமா? கற்றக் கையோடு சான்றிதழையும் வழங்குகிறது ( நம்ம அண்ணா பல்கலைக்கழகத்தை போல் அல்லாமல் ).

’உடாசிட்டி’ தளமானது கற்றுக் கொள்பவர்களை மூன்று விதமாக பிரிக்கிறது.

  1. BEGINNERS ( தொடக்க நிலையில் உள்ளவர்கள் )
  2. INTERMEDIATE ( ஒரளவு பாடம் தெரிந்தவர்கள் )
  3. ADVANCED ( நன்றாக தெரிந்தவர்கள் )

ஒவ்வொரு பாடமும் தன்னகத்தே பல வீடியொக்களும், கேள்வி-பதில் , வீட்டுப் பாடங்களையும் கொண்டிருக்கிறது. கசடறக் கற்று தெளியுங்கள். உண்மையிலேயெ ஒரு புதுமையான அனுபவமாக அமையும். அந்த தளத்திற்கு செல்ல http://www.udacity.com/

Advertisements

2 responses to “கசடற கற்றுத் தரும் இணையதளம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s