பொன்னான பத்து தகவல்கள்

இன்றைய அவசர உலகில் யாருக்கும் நின்று நிதானித்து செயல்பட முடிவதில்லை. அப்படியே நேரம் கிடைத்தாலும் யாரும் பொறுமையைக் கடைப்பிடிப்பதில்லை. எங்கும் வேகம். எதிலும் வேகம். நானும் அப்படித்தான். என் கல்லூரிப் புத்தகங்களை எடுத்து படிக்க பெரும்பாலும் பொறுமை இருப்பதில்லை. எதையும் வேகமாக கற்க வேண்டும் என நினைப்பவன் நான். என்னை போல நினைப்பவர்களுக்கே இந்த பதிவு.

எதாவது புதிதாக கற்க விரும்புகிறீர்களா? எந்த விஷயத்தை பற்றியாவது ஏதாவது சில செய்திகள் அறிந்துக் கொள்ள ஆசையா? நீங்கள் கூகுளிடமே கேட்கலாம். இங்குதான் பிரச்சனை. அது கொட்டும் தகவல்கள் எக்கசக்கமாக இருக்கும். பிறகு? தலைவலிதான். கண்கள் இருட்டாகும். மயக்கம் வராத குறைதான்.

10 Fun Facts About என்று ஒரு தளம். அதாவது ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி முக்கியமான, வேடிக்கையான சில தகவல்களை குறிப்பிட்டிருப்பார்கள். சரியாக சொன்னால் நிறைய விஷயங்களை பற்றிய முக்கியமான 10 தகவல்களை தொகுத்து அளித்திருப்பார்கள்.

உதாரணத்திற்கு ஒரு சில தகவல்கள்….

  • பில்கேட்ஸ் ஒவ்வொரு வினாடியும் 250 டாலர்கள் சம்பாதிக்கிறார்.
  • .அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் யாருடனும் கை குலுக்கியதில்லை.
  • தேனீக்களால் சிவப்பு நிறத்தை அடையாளம் காண இயலாது.
  • ஜமைக்காவின் தேசிய பானம் ரம். ( உண்மைதான்! )
  • ஆப்பிள் தொடங்குவதற்கு முன் ஸ்டீவ் ஜாப்ஸ் வேலை பார்த்த கம்பேனி HP.

இப்படி 94 விஷயங்களைப் பற்றி 940 தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு முறை சென்றுதான் பாருங்களேன். அதற்கான உரலி இதோ..  http://www.10-facts-about.com/

பின்னூட்டமொன்றை இடுக