என் நிலை…. சரியா.. தவறா?

என் மோசமான வாழ்க்கையில் மற்றொரு மோசமான நாள் இன்று. எதிர்பார்த்த மாதிரியே சில பாடங்களில் தோல்வி. ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது? இது யாரின் தவறும் அல்ல. என் தவறுதான். இதை தவறு என்று கூற மாட்டேன். ஒரு தடவை தெரியாமல் செய்தால் அது தவறு. அதையே தெரிந்தே பலமுறை செய்தால் தப்பு அல்லவா? நான் செய்தது தப்பு.

ஒவ்வொரு செமஸ்டர் முடிவில் ஒரு உறுதிமொழி எடுப்பதும் அதை கொஞ்ச நாளிலேயே மறந்து விடுவதும் அடியேனின் செயலாகிவிட்டது. என் பெற்றோரிடம் மன்னிப்புக் கேட்க தகுதியற்றவனாகி விட்டேன். வீட்டில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் மனசாட்சி என்னை கொன்று வருகிறது.

நான் தொடர்ந்து செய்து வரும் முட்டாள்தனம் குறை கூறுவது. எத்தனையோ பேரை கிண்டல் செய்து மகிழ்ந்திருக்கிறேன். அதற்கு கிடைத்த சவுக்கடிதான் இது. அது மட்டுமா? இந்த சமுதாயத்தையும் குறைக் கூறிதான் வருகிறேன். ஆனால் நான் உருப்படியாக எதாவது செய்து இருக்கிறேனா என்றால் இல்லை என்பதே எனது பதில். பின் மற்றவரை குறைக் கூறி என்ன பயன்?

ஒவ்வொரு நாளும் நான் கல்லூரியில் அடைந்து வரும் அவமானம் இனிமேல் இன்னும் அதிகரித்து விடும். என் கண் முன்னே மட்டும் நண்பனாக செயல்படும் சிலர் மகிழ்ச்சிக்குள்ளாவர். ஆசிரியப் பெருமக்களுக்கு அவமானப்படுத்த கிடைத்தது மற்றொரு காரணம். வங்கியில் கடனளிக்க தயங்குவர். அது சரி ஒரு முட்டாளுக்கு கடன் கொடுக்க யார்தான் விரும்புவார்? அப்படியானால் நான் ஒரு முட்டாள்தானா?

ஆம். அதிலென்ன சந்தேகம். சரி. அதெல்லாம் இருக்கட்டும். இனி நான் என்ன செய்யப் போகிறேன். மீண்டும் சில புதிய உறுதிமொழிகள்.

  1. இனிமேல் பொறியியல் படிப்பில் சற்றே கவனம் செலுத்த வேண்டும்.
  2. தேவையில்லாத வெட்டிப் பேச்சுகள் தவிர்க்க வேண்டும்.
  3. யாரையும் சார்ந்து இருக்க கூடாது.
  4. முக்கியமாக யாரையும் நம்ப கூடாது.
  5. அடுத்தவர்களின் ஏளனப் பேச்சுகளுக்கு மதிப்பளிக்க தேவையில்லை.
  6. ஒவ்வொரு நாளையும் கடைசி நாளாக நினைத்து செயல்பட வேண்டும்.
  7. இறுதியாக மேற்கண்ட அனைத்தையும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

இனிமேல் தினமும் பதிவுகள் எழுத முயற்சிக்கிறேன். தூங்கும் நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரமாக குறைக்கிறேன். என்னை தவறாக எடை போட்டவர்களுக்கும் மட்டமாக நினைத்தவர்களுக்கும் பதிலடி கொடுக்காமல் ஒயப்போவதில்லை. படம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s