காப்பி அடிப்பதை கண்டிக்க ஒரு தளம்

ஃபரீத் சகாரியா. தெரியுமா இவரை? புகழ்பெற்ற ’டைம்’ பத்திரிக்கையில் ஒரு முக்கிய எடிட்டராக பதவி வகிப்பவர். மன்னிக்கவும். வகித்தவர். ஏன்? இப்பொழுது என்ன ஆயிற்று? கேள்வி எழுகிறதா? தொடர்ந்து படிக்கவும். ப்லாகியாரிசம் (plagiarism) கேள்விப்பட்டு உள்ளீர்களா? இல்லை எனில் இதோ உங்களுக்கான […]

Read Article →

தூரங்களை அறிந்துக் கொள்ள உதவும் தளம்

நமது வாழ்க்கையில் பயணம் என்பது முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு நாளும் நாம் ஒவ்வொருவரும் நமது வேலை நிமித்தமாகவோ அல்லது வேறு விஷயமாகவோ ஏதாவது ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. சில நேரங்களில் நமக்கு தெரியாத வெளியூருக்கு செல்ல வேண்டியிருக்கும். ஆனால் […]

Read Article →

கசடற கற்றுத் தரும் இணையதளம்

நான் முன்னரே ஒரு பதிவில் கூறியது போல இணையம் என்பது ஒரு கடல். இங்கு அளவில்லா ஆபத்துகள் உள்ளது போன்றே அளவற்ற பயன்களும் உள்ளன. எதுவுமே நீங்கள் அணுகுவதைப் பொறுத்தது. இங்கே கற்றுக் கொள்ள ஏராளமான விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன என்பதை […]

Read Article →

பொன்னான பத்து தகவல்கள்

பத்து தக

இன்றைய அவசர உலகில் யாருக்கும் நின்று நிதானித்து செயல்பட முடிவதில்லை. அப்படியே நேரம் கிடைத்தாலும் யாரும் பொறுமையைக் கடைப்பிடிப்பதில்லை. எங்கும் வேகம். எதிலும் வேகம். நானும் அப்படித்தான். என் கல்லூரிப் புத்தகங்களை எடுத்து படிக்க பெரும்பாலும் பொறுமை இருப்பதில்லை. எதையும் வேகமாக கற்க வேண்டும் என நினைப்பவன் நான். என்னை போல நினைப்பவர்களுக்கே இந்த பதிவு.படம்

எதாவது புதிதாக கற்க விரும்புகிறீர்களா? எந்த விஷயத்தை பற்றியாவது ஏதாவது சில செய்திகள் அறிந்துக் கொள்ள ஆசையா? நீங்கள் கூகுளிடமே கேட்கலாம். இங்குதான் பிரச்சனை. அது கொட்டும் தகவல்கள் எக்கசக்கமாக இருக்கும். பிறகு? தலைவலிதான். கண்கள் இருட்டாகும். மயக்கம் வராத குறைதான்.

10 Fun Facts About என்று ஒரு தளம். அதாவது ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி முக்கியமான, வேடிக்கையான சில தகவல்களை குறிப்பிட்டிருப்பார்கள். சரியாக சொன்னால் நிறைய விஷயங்களை பற்றிய முக்கியமான 10 தகவல்களை தொகுத்து அளித்திருப்பார்கள்.

உதாரணத்திற்கு ஒரு சில தகவல்கள்….

  • பில்கேட்ஸ் ஒவ்வொரு வினாடியும் 250 டாலர்கள் சம்பாதிக்கிறார்.
  • .அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் யாருடனும் கை குலுக்கியதில்லை.
  • தேனீக்களால் சிவப்பு நிறத்தை அடையாளம் காண இயலாது.
  • ஜமைக்காவின் தேசிய பானம் ரம். ( உண்மைதான்! )
  • ஆப்பிள் தொடங்குவதற்கு முன் ஸ்டீவ் ஜாப்ஸ் வேலை பார்த்த கம்பேனி HP.

இப்படி 94 விஷயங்களைப் பற்றி 940 தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு முறை சென்றுதான் பாருங்களேன். அதற்கான உரலி இதோ.. 

Read Article →