கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய மென்பொருட்கள்

must needed softwares

இலவசம். இலவசம். எங்குப் பார்த்தாலும் இலவச மயம். பொதுவாக மனிதனின் மனமானது இலவசமாக கிடைக்கும் பொருட்களை நோக்கியே ஈர்க்கப்படுகிறது. இதில் குற்றம் சொல்ல எதுவும் இல்லை. ஏனெனில் அது மனிதனின் இயற்கை. அதெல்லாம் இருக்கட்டும். இப்போ எதுக்கு இந்த மொக்கை? அட ஒண்ணுமில்லீங்க….

இந்த பதிவில் உங்கள் கணிணியிலோ அல்லது லேப்டாப்பிலோ கண்டிப்பாக இருந்தே ஆக சில மென்பொருட்களை பரிந்துரைக்க இருக்கிறேன். கவனமாக படிக்கவும்.

1.Google Chrome (கூகுள் குரோம்)

இன்றைய உலகில் எல்லாமே இணையமயமாயிற்று. நீங்கள் செய்ய நினைக்கும் பெரும்பாலான காரியங்களை இணையம் மூலம் செய்ய முடியும் (முக்கியமான சில விஷயங்களை தவிர!) என்பது ஆகச் சிறந்த உண்மை. ஆனால் இணையத்தில் உங்களை இணைக்க ஒரு விஷயம் தேவைப்படுகிறது. அதுதான் உலாவி. அதாவது Browser (ப்ரவுசர்). இன்றைய தேதியில் உலகின் நம்பர் ‘1’ இணைய உலாவி கூகுள் குரோம்தான். இது தேடியந்திர ஜாம்பவான கூகுளின் தயாரிப்பு. குரோமானது உங்களை இணையத்தில் இணைப்பதில் மற்ற எந்த உலாவியை விடவும் துடிப்புடன் செயல்படுகிறது. அது மட்டுமல்லாமல் HTML5 இணைய மொழியை சப்போர்ட் செய்கிறது. நிச்சயமாக உங்களிடம் இருக்க வேண்டிய ஒரு உலாவி. தரவிறக்க இங்கே செல்லவும்.

2.VLC Media Player

அனேகமாக உங்களுக்கு அல்லது எனக்கு தெரிந்து இந்த மென்பொருளை பயன்படுத்தாத பொதுஜனம் யாரும் இருப்பதாக புலப்படவில்லை. இது உங்களுக்கு மிகையாக தெரியலாம். ஆனால் இதுதான் உண்மை. VLC ப்ளேயரானது ஏறத்தாழ அனைத்து விதமான மீடியா ஃபைல்களையும் திறக்கும் திறமை படைத்தது. VideoLAN நிறுவனத்தாரின் வெளீயிடு இது. தரவிறக்க தட்டுங்கள்.

3.Microsoft Security Essentials (MSE)

ஆன்டி-வைரஸ் இல்லாமல் இணையம் பயன்படுத்துவது கண் தெரியாத ஒருத்தன் கார் ஒட்டுவதை போன்று மிக்க ஆபத்தானது. இணையம் என்பது ஒரு கடல். மூழ்கினால்தான் தெரியும் அதில் உள்ள ஆபத்துகள். நீங்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இல்லாவிடில் உங்கள் அடையாளமே அழிக்கப்பட்டு விடும். தவறான இணையதளங்கள், வைரஸ், மால்வேர், ஸ்பைவேர், என்று ஏகப்பட்ட விஷயங்களால் பாதிக்கப்படாமல் இருக்க நீங்கள் ஒரு மிக சிறந்த ஆன்டி-வைரஸ் வைத்திருக்க வேண்டும். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தாரின் Security Essentials ஆனது உங்களை பெரும்பாலான ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுகிறது. ஆனால் இதை நிறுவ இணைய வசதி முக்கியம். தரவிறக்க…..

4.CCleaner

உங்கள் கணினியில் ஒளிந்துக் கொண்டிருக்கும் தேவையில்லாத ஃபைல்கள், ப்ரோக்ராம்கள், உங்கள் உலாவி வரலாறு போன்ற பல்வேறு விஷயங்களை நீக்குகிறது. இதை பற்றி நான் ஒரு வரியில் கூறிவிட்டாலும் பயன்படுத்திப் பாருங்கள். அப்போது தெரியும் இதன் அருமை. இதை தரவிறக்க…..

நிச்சயமாக மீண்டும் சந்திப்போம் மற்றொரு அருமையான பதிவில். 

Advertisements
Read Article →